ஹட்டன், காசல்ரீ நீர்த்தேக்கத்தில் உள்ள தீவு ஒன்றில் இன்று செவ்வாய் கிழமை காயமடைந்த கடல் கழுகு ஒன்று சுற்றுலா ஹோட்டல் ஊழியர் ஒருவரால் மீட்கப்பட்டு வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த நீர்த்தேக்கத்தை சுற்றி வாழும் கடல் கழுகுகள் மீது காகங்கள் தாக்கியதால்இ காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பறக்க முடியாமல், காசல்ரீ நீர்த்தேக்கத்தில் உள்ள தீவில் படுத்திருந்துள்ளது.
இந் நிலையில் ஹோட்டல் ஊழியர் திங்கட்கிழமை நண்பகல் படகில் கடல் கழுகை மீட்டு காயங்களுக்குள்ளான கடல் கழுகை ஹட்டன் பொலிஸாரின் ஊடாக வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
நுவரெலியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் காயமடைந்த கடல் கழுகை ஹட்டன் பொலிஸாரிடமிருந்து பொறுப்பேற்று, ரந்தெனிகல கால்நடை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.