காத்தான்குடி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.
25 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாச்சகர் அமல் ஏ.எதிரிமானவின் வழிகாட்டலில் காத்தான்குடி கடற்கரை வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இந்த இளைஞர் 690 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதானார்.
கைதான இளைஞர் காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுள்ளதடன் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதை பொருளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.