புதிய காத்தான்குடி பரீட் நகரில் பாம் வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை இரவு 9.00 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த குடும்பஸ்தர் மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஜாபித் அக்தர் (வயது 23) என்ற இளம்குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இரண்டு திருமணங்கள் செய்துள்ள நிலையில் முதல் மனைவிக்கும் அவருக்கும் ஒரு பிள்ளை இருப்பதாகவும் இவரது இரண்டாவது மனைவி தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதேவேளை குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகி அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கினறனர்.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.