மாத்தளை இரத்தோட்டை – நிக்லோயாவத்த பிரதேசத்தில் நேற்று புதன் கிழமை காலை காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறால் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் காரணமாக ஏற்பட்ட தகராறால் கொலை செய்யப்பட்ட 39 வயதுடைய நபர் கடுமையான தாக்கதலுக்குள்ளாகிய நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் வசிக்கும் 5 சந்தேக நபர்களை இரத்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் மகளுடனே கொலை செய்யப்பட்ட நபர் காதல் உறவில் இருந்தமை தெரிய வந்துள்ளது.
மேலும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.