-பதுளை நிருபர்-
பதுளை மஹியங்கனை வீதியிலுள்ள காணி ஒன்றில் இருந்து இன்று வியாழக்கிழமை காலை கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை மஹியங்கனை வீதியின் கைலாகொட பிரதேசத்தில் அமைந்துள்ள பழைய பொலிஸ் கட்டிடத்துக்கு அருகில் கைக்குண்டு கிடப்பதாக பதுளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்று கைக்குண்டுடை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
மு90 கைக்குண்டே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
தற்போது முன்னெடுக்கப்படும் சுற்றி வளைப்பிற்கு பயந்து கைக்குண்டு குறித்த பகுதியில் வீசப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்