-கிளிநொச்சி நிருபர்-
காணி உறுதி பெற்றுத்தருவதாக கூறி ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மோசடி செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டாவளை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் ஒருவர் கடந்த சில இரண்டு மாதங்களுக்கு முன்னர் சாதாரண காணி அனுமதிப் பத்திரத்தை (பேர்மிட்) காணி உறுதிப்பத்திரமாக மாற்றி தருவதாக தெரிவித்து காணி உரிமையாளரிடமிருந்து 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்
கிராம சேவையாளர் ஊடாக தன்னால் இதை பெற்றுத்தர தன்னால் முடியும் எனவும் இவ்விடயத்தை இரகசியமாக வைத்திருக்குமாறும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் தொலைபோசியினுடாக பிரதேச செயலாளரின் விருந்துபசாரம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக 30 ஆயிரம் ரூபாய் பணம் மேலும் தேவைப்படுவதாக இதனை தருமாறு காணி உரிமையாளரிடம் குறித்த நபர் கெட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த காணி உரிமையாளர் நேரடியாகவே பிரதேச செயலாளரை சந்தித்து இப்படி விருந்துபசார நிகழ்வு 30 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளீர்களா என்று கேட்டுள்ளார்.
அதை கேட்ட பிரதேச செயலாளர் நடந்த விடயத்தினை கேட்டறிந்ததுடன், சம்பந்தப்பட்ட காணி உறுதி பெற்று தருவதாக கூறிய நபரை அழைக்குமாறு தொலைபேசி ஊடாக அழைத்ததை அடுத்து, குறித்த நபரும் நேரடியாக 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பெறுவதற்கு வந்துள்ளார்.
பிரதேச செயலாளர் தர்மபுரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, சந்தேகநபர் தருமபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.