-கிண்ணியா நிருபர்-
மூதூர் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காணிக்கான அனுமதிப்பத்திரங்கள் கிழக்கு மாகாண ஆளுநரினால் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமான், செக் குடியரசின் உயர்ஸ்தானிகர், மேலதிக மாவட்ட செயலாளர், கிழக்கு மாகாண காணி ஆணையாளர், கிழக்கு மாகாண முதலமைச்சரின் திட்டமிடல் பணிப்பாளர், கிழக்கு மாகாண உதவி காணி ஆணையாளர், மூதூர் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், கிராம நிருவாக உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இதன்போது காணி கச்சேரி ஊடாக 200 காணி உரிமையாளர்களுக்கான அனுமதிப்பத்திரங்களுக்கான கடிதம் கையளிக்கப்பட்டது.



