குருணாகல் பன்னல பகுதியில் 4 ஏக்கர் 23 பேர்ச்சஸ் காணிக்கு போலியான ஆவணம் தயாரித்து 16 மில்லியன் மோசடி செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதுருகிரிய பிரதேசத்தை சேர்ந்த 72 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 2017ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ரூ. 500,000 சரீரப் பிணையிலும் மற்றும் ரூ. 10,000 ரொக்கப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.