-யாழ் நிருபர்-
காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த முதியவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை உடுவில் பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உடுவில் மல்வம் பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் செல்வராசா (வயது – 71) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 24ஆம் திகதி வீட்டில் இருந்து முதியவர் ஒருவர் வெளியே சென்ற நிலையில், அவர் காணமல் போனதாக அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.