அங்குருவாதொட்ட, உருதுதாவ பிரதேசத்தில் இருந்து காணாமல் போன இளம் தாய் மற்றும் அவரது மகளின் சடலங்கள் அங்குருவாதொட்ட இரத்மல்கொட காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வாசனா குமாரி (வயது – 24) மற்றும் அவரது 11 மாத மகள் தஷ்மி திலன்யா ஆகியோர் அவரது கணவர் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் கணவர் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த இருவரும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.