மஹியங்கனை தெய்கொல்ல பகுதியில் உள்ள வீடொன்றை இன்று புதன் கிழமை அதிகாலை 4 மணியளவில் காட்டு யானை தாக்கியதில் வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
இலக்கம் 4 குடகலயாய தெய்கொல்ல பகுதியை சேர்ந்த 68 வயதுடைய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் மேலும் 23 வயதுடைய மரணித்த பெண்ணின் பேத்தி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
பிரேதம் தற்போது மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.