உடதியலும பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட யுவதியின் காதலனை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பண்டாரவளை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கொஸ்லந்த தியலும நீர்வீழ்ச்சியின் உடதியலும பகுதிக்கு கடந்த மே மாதம் 11 ஆம் திகதி இவர்கள் இருவரும் சென்று இரவு முகாமிட்டுள்ளனர். இதன்போது அவர்கள் மீது காட்டு யானை தாக்கியதில் யுவதி உயிரிழந்த நிலையில் காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் யுவதியின் காதலர் வழங்கிய முரண்பாடான வாக்கு மூலங்கள் காரணமாக கொஸ்லந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.