மஹவ பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சியவுத்தாகம பகுதியை சேர்ந்த 43 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதிக்குள் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை நுழைந்த யானையை விரட்டுவதற்கு முற்பட்ட போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதுடன் சடலம் மஹவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










