பொலன்னறுவை ஹிங்குராங்கொட பாலுவேவ பிரதேசத்தில் இன்று புதன் கிழமை காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சந்துசிறி மல்காந்தி (வயது – 60) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் ஹிங்குராங்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலில் பணியாற்றுவதாகவும் தனது வீட்டிலிருந்து ஹோட்டலிற்கு சென்று கொண்டிருந்த போது காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.