வெலிகந்த, குடபுகுன காப்புக்காட்டில் சிதைந்த நிலையில் எலும்புகள் மற்றும் பெண்களின் ஆடைகளின் சில பாகங்கள் நேற்று செவ்வாய் கிழமை வெலிகந்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த எலும்புத் துண்டுகள் இருந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண்களின் ஆடைகள்இமற்றும் மதிய உணவுப் பெட்டியின் துண்டுகள் 14.11.2019 அன்று சிஹான்புர வெலிகந்த பிரதேசத்தில் காணாமல் போன பெண் ஒருவருடையது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் எலும்புகளை அடையாளம் காண அறிவியல் சோதனை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.