மொனராகலை பகுதியில் கஞ்சா தோட்டம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.
ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடவலவ சரணாலயத்திற்கு உட்பட்ட வெஹெரகொல்ல பிரதேசத்தில் நான்கரை ஏக்கர் பரப்பளவில் வளர்ந்திருந்த குறித்த பகுதிக்கு செல்வதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 16 கிலோமீட்டர் தூரம் காட்டுக்குள் சென்று, இரண்டரை கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா செடிகள் முற்றாக அழிக்கப்பட்டதுடன் மீட்கப்பட்ட தடயப்பொருட்கள் ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.