போரினால் பாதிக்கப்பட்ட காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பலஸ்தீனியர்களுக்காக 1,000 கிலோகிராம் இலங்கையின் சிலோன் தேயிலையை பலஸ்தீனியர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி இலங்கை தேயிலை சபையின் இந்த நன்கொடை, விரைவில் சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொண்டு செல்லப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.