இந்தியாவில் மும்பையிலிருந்து பெங்களூருக்கு பயணம் செய்த பயணி ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கழிப்பறையின் கதவு திடீரெனப் பழுதானதால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உள்ளே சிக்கிக்கொண்டார்.
விமானம் பெங்களூரில் தரையிறங்கிய பிறகே அவர் கழிப்பறையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டு அவருக்கு உடனடியாகச் சிகிச்சை வழங்கப்பட்டது.நடந்த சம்பவத்துக்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பயணியிடம் மன்னிப்புக் கேட்டது.