இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் தனது காதலனுக்காக 2 வயது குழந்தையை தாயே கொன்று படத்தை பார்த்து திட்டம் தீட்டி நாடகமாடியுள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தில் வசிக்கும் கட்டட தொழிலாளியான நயனா மாண்டவிக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகிய நிலையில், 2 வயதில் வீர் என்ற ஆண் குழந்தை இருந்தது. தனது கணவருடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டு அதன் கொடுமை தாங்க முடியாமல் தனது குழந்தை கைக்குழந்தையாக இருக்கும் போது அங்கிருந்து வெளியேறி தாய் வீட்டில் வசிக்க தொடங்கினார்.
குறித்த பெண் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில், இவருக்கும் ஜார்கண்டை சேர்ந்த நபருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த உறவுக்கு தடையாக நயனாவின் இரண்டு வயது குழந்தை இருந்துள்ளது. குழந்தையுடன் நீ இருந்தால் உன்னை ஏற்க மாட்டேன் என நயனாவின் காதலன் தெரிவித்துள்ளார்.
இதனால் குழந்தையை கொலை செய்ய முடிவெடுத்து திரிஷ்யம் படத்தை பல முறை பார்த்து கொலை செய்துவிட்டு எப்படி தப்பிப்பது என வியூகங்களை வகுத்துள்ளார்.
இந்நிலையில்இ குழந்தையை கொலை செய்த நயனா தான் வேலை பார்க்கும் கட்டுமான இடத்தில் உள்ள வடிகால் கால்வாய் குழி ஒன்றில் புதைத்துள்ளார். பின்னர் தனது குழந்தை கானாமல் போய்விட்டதாக பொலிஸாரிடம் புகார் அளித்தார்.
முதலில் பொலிஸாரருக்கு சந்தேகம் வராத நிலையில், பெண்ணின் வாக்குமூலங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் சிசிடிவி ஆதாரங்களை எல்லாம் பார்த்த பின்னர் இந்த சந்தேகம் வலுத்து அந்தப்பெண்ணிடம் விசாரணை செய்ததில் நயனா உண்மையை ஒப்புக்கொண்டார்.
அத்துடன் தனது குழந்தையை புதைத்த இடத்தை மாற்றி மாற்றி கூறி அலைக்கழித்துள்ளார். இறுதியில் பொலிஸார் நயனா வேலை செய்யும் இடத்தில் கழிவறைக்காக போடப்பட்ட குழியில் சடலம் வீசப்பட்டது தெரியவந்தது. அங்கிருந்து குழந்தையின் உடலையும் மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.