களுத்துறை – களுகங்கையில் நீராடச்சென்ற மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
களுத்துறை பன்வில மற்றும் தொடங்கொடை பகுதிகளை சேர்ந்த 15 மற்றும் 16 வயதுகளையுடைய இரண்டு மாணவிகளும் 17 வயதுடைய மாணவரொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் தற்போது பிரேத பரிசோதனைக்காக நாகொட போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.