சுவீடனின் மத்திய பகுதியிலுள்ள கல்வி நிலையமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
‘சுவீடன் வரலாற்றில் மிகவும் மோசமான துப்பாக்கிச் சூடு” இதுவென அந்த நாட்டுப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்