-நிதர்சன்-
கல்வி அமைச்சின் கீழ் உள்ள தொழில்நுட்பக்கல்வி பயிற்சித்திணைக்களத்திற்கு 200 போதனாசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய பணிப்பாளர் நாயகம் எஸ்.சீ.ஜகத் நடவடிக்கை எடுத்துள்ளதாக உதவிப்பணிப்பாளர் நாயகம்(கல்வி நடவடிக்கை) பரமேஸ்வரன் தெரிவித்தார்.
அரச முகாமைத்துவ திணைக்களத்திடம் இருந்து அனுமதியை எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
வர்த்தகம்,தகவல் தொழில்நுட்பம்,ஆங்கிலம் தவிர்ந்த விவசாயம் உள்ளடங்கலாக மும்மொழிமூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படும் இவர்கள் தொழில்நுட்பக்கல்லூரிகளுக்கு நியமிக்கப்படுவர் எனவும் மேலும் தெரிவித்தார்.