ஈரானின் கெர்மான் பகுதியில் உள்ள காசிம் சுலைமானின் கல்லறைக்கு அருகில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 103 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன், காயமடைந்த 173 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு அமெரிக்காவினால் நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் ஈரானின் புரட்சிப் படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.
இதன்காரணமாக அமெரிக்கா மீது ஈரான் கடும் கோபத்தை வெளிப்படுத்தியதுடன், குறித்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதை அமெரிக்கா உறுதி செய்திருந்தது.
இந்த நிலையில், ஈரானின் கெர்மானில் உள்ள காசிம் சுலைமானின் கல்லறையில் இன்று நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
இதற்காக பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு கூடியிருந்தனர்.
இதன்போது, தொடர்ச்சியாக இரண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியது.
இந்தநிலையில் தொடர்ச்சியாக மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.