கொழும்பு – கல்கிசையில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 19 வயது இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம், அவனது தாயாரின் போதைப்பொருள் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பாதிக்கப்பட்டவரின் தாய் மீது பல்வேறு நீதிமன்ற வழக்குகள் இருப்பதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தக் கொலை போதைப்பொருள் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதா என்பதைக் கண்டறியவும், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்யவும் கல்கிசை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கல்கிசையில் கடற்கரை சாலை சந்திக்கு அருகில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு துப்பாக்கிதாரிகள் இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த இளைஞன் களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தான்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்