அமெரிக்காவில் இருந்து கனடாவின் வான்கூவர் நகருக்கு கடந்த மாதம் 22ஆம் திகதி தனது கலாநிதி பட்டம் தொடர்பான ஆராய்ச்சி ஆய்வறிக்கையை வழங்க சென்ற போது விபத்தில் சிக்கி இலங்கையர் உயிரிழந்துள்ளார்.
கணனி பொறியியலாளரான அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற கல்விபயின்று வரும் வினோஜ் யசிங்க ஜயசுந்தர என்பவரே இவ்வாறு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு கொட்டாவ மத்தேகொடவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.