கொழும்பு காலிமுகத்திடலில் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவனெல்லை சம்போதி விகாரையில் வசித்து வந்த 38 வயதான கல்பொல ஸ்ரீ நந்த தேரரின் சடலமே இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த தேரரின் சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.