தேக்கவத்தை பிரதேசத்தில் 6 மாத கருவொன்று புதைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்புத்தேகம தேக்கவத்தை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயொருவரும் மற்றுமொரு நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கைது செய்யப்பட்ட பெண் கணவரை பிரிந்து தனது பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வருவதாகவும், கலதிவுல்வெவ பிரதேசத்தில் உள்ள 44 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவருடன் தகாத உறவை பேணி வந்துள்ளதாள்ளார் இதனால் அந்த பெண், கர்ப்பமாகி கரு 6 மாதமாக இருக்கும் போது அதனை கலைப்பதற்காக சில மாத்திரைகளை உட்கொண்டதாக கருவை கலைத்த பின் அதனை புதைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு குழந்தை பிறந்ததாகவும், ஆனால் அவரது குழந்தையை காணவில்லை என்றும் கிடைக்கபெற்ற தொலைபேசி அழைப்பை அடுத்து தம்புத்தேகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அந்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தம்புத்தேகம பொலிஸார் கரு புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.