திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு றூபஸ் காட்டுப்பகுதியில் விறகு எடுக்கச் சென்ற போது கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.
திருக்கோவில் 04 காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த தந்தையும் மகனுமே இவ்வாறு கரடி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கஞ்சிகுடிச்சாறு ரூபஸ்குளம் காட்டு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை கரடி தாக்கியதில் தலைஇ காலில் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து இருவரும் உடனடியாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர் .
மேலும் இதுவரையில் திருக்கோவில் பிரதேசத்தில் 4 பேர் கரடி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்