கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று 10 மணித்தியால நீர்வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்துவதாக சபை தெரிவித்துள்ளது .
நிட்டம்புவ, கந்தஹேன, மாபாகொல்ல, கஸ்தெனிய, பின்னகொல்லவத்த, கொலவத்த, கொரக்கதெனிய, ரன்பொகுனுகம, ரன்பொகுனுகம வீடமைப்புத் திட்டம், படலீய, அத்தனகல்ல, பஸ்யால, ஊருபொல, திக்கந்த, மீவிட்டிகம்மான, பாஇம்புல, மடலான, பக்கல்ல, அலவல, கலல்பிட்டிய மற்றும் எலமுல்ல ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகத் தடை ஏற்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.