5 கோடி ரூபா கப்பம் கோரி கொலை அச்சுறுத்தல் வழங்கியதாக கருதப்படும் சந்தேக நபர் ஒருவர் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
குடாபுத்கமுவ, அங்கொட பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் இடையில் உள்ள காணி தகறாறு காரணமாக சந்தேக நபர் வெளிநாட்டில் உள்ள தனது உறவினர் மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் மிரிஹான பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு தற்போது மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.