கொட்டதெனியாவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை தனியார் பேருந்தொன்று கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதுடன் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக தகவல் எதுவும் கிடைக்க பெறாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.