வெளிநாடு செல்ல காத்திருந்த இளைஞன் ஒருவர் வவுனிக்குளத்திலிருந்து இன்று செவ்வாய் கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆனந்தரசா ஜீவன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
20 இலட்சம் பணத்துடன் யோகபுரத்தில் இருந்து பாண்டியன் குளத்திற்கு நேற்று (29) பிற்பகல் சென்ற குறித்த இளைஞன் இரவு 8.40 வரை நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடி உள்ளதாகவும் பின்னர் அவரது தொலைபேசி இயங்கவில்லை என்றும் அறியமுடிகின்றது.
குறித்த இளைஞரின் தொடர்பு கிடைக்காத நிலையில் அவரது நண்பர்கள் தேடியபோது இன்று அதிகாலை 3.00 மணியளவில் பாண்டியன்குளம் குளக்கரையில் அவரது மோட்டார் சைக்கிள் இனங்காணப்பட்டுள்ளது.
அதன்பின்னர் தேடியதை தொடர்ந்து வவுனிக்குளத்தின் மூன்றாவது நீர் சுருங்கையிலிருந்து சடலம் இனங்காணப்பட்டது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பாண்டியன்குளம் பொலிஸார், நீதிபதி முன்னிலையில் சடலத்தை மீட்டு, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்