கனடாவில் இருந்து கனேமுல்ல பகுதியிலுள்ள ஒருவரின் முகவரிக்கு அனுப்பப்பட்ட 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப் பொருள் சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர்.
போதைப்பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.