கந்தானை பகுதியில் கடந்த ஒகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட 3 பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொம்பே, உடுகம்பொல மற்றும் கிரிவத்துடுவ பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து ரீ – 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 57 தோட்டாக்கள், கையடக்க தொலைபேசி மற்றும் வேன் வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.