கந்தானை இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் புகையினை சுவாசித்த பாடசாலை மாணவர்கள் 68 பேர் திடீரென சுகவீனமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கந்தானை புனித செபஸ்டியன் கல்லூரி மற்றும் அதன் பெண்கள் கல்லூரி மாணவிகளே இவ்வாறு சுவாசக் கோளாறு காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராகம பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.
கந்தானையில் உள்ள இரசாயன உற்பத்தி தொழிற்சாலைக்கு சொந்தமான களஞ்சியசாலையில் இன்று காலை 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிவக்கப்பட்டுள்ளது.