கந்தானை பியோ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று வெள்ளி கிழமை காலை 6.10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ரீ56 வகை துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த வீடு வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது எனவும், சந்தேகநபர்கள் அவரிடம் கப்பம் கோரியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
டுபாயில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களான ஹீனடியன மஹேஷ், கந்தானே சூடிமல்லி மற்றும் கம்பஹா வருண ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.