-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் -வெலிங்டன் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவரே கைது செய்யப்பட்டுள்ளார்
நபர் ஒருவர் ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கந்தளாய் பிராந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைவாக குறித்த சந்தேக நபரை சோதனை இட்ட போது அவரிடமிருந்து ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 540 மில்லிகிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்த குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.