இளவாலை பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகாமையில் கத்தியால் குத்தி இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ராமச்சந்திரன் ராஜ்குமாரே (வயது – 35) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் உறவினர்கள் மூவருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இருவர் இணைந்து ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதோடு அவர்மீது கத்திக் குத்து தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து படுகாயமடைந்த நபர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் இது தொடர்பில் இருவரை இளவாலை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.