கதிர்காமம் பிரதேச சபை கலைக்கப்பட்டது

கதிர்காமம் பிரதேச சபையை நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் கலைத்து, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, மே 10ஆம் திகதி உள்ளுராட்சி சபையின் தலைவர் உள்ளிட்டோரின் திறமையின்மை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக, ஓய்வுபெற்ற நீதிமன்ற நீதிபதி எச்.எம்.ஆர். அனுரகுமாரவின் விசாரணை அறிக்கையின் உண்மைகளை கருத்திற்கொண்டு, இவ்வாறு பிரதேச சபை கலைக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கதிர்காமம் பிரதேச சபையின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கும், புதிய உள்ளூராட்சி சபை ஸ்தாபிக்கப்படும் வரை அல்லது புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பணிகளை மேற்கொள்ள மொனராகலை உதவி உள்ளூராட்சி ஆணையாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.