கதிர்காமம் ஆலயத்தில் 38 பவுண் நிறை கொண்ட தங்க தகடுகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைதான பிரதான பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று புதன்கிழமை திஸ்ஸமஹாராம நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கதிர்காமம் ஆலயத்துக்கு காணிக்கையாக செலுத்தப்பட்ட 38 பவுண் நிறை கொண்ட தங்க தகடுகள் காணாமல் போன சம்பவம் பிரதான பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
பாதாள உலக தலைவர் அங்கொட லொக்காவின் மனைவி ருஹுணு கதிர்காமம் விகாரைக்கு வழங்கிய 38 பவுண் தங்க தட்டு காணாமல் போனமை தொடர்பிலேயே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.