கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகாமையில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போது கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த டி. எம். ஜாலிய திஸாநாயக்கவின் மாஹோ தலதாகம பகுதியில் உள்ள வீட்டிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை சென்று அவரது குடும்பத்தினரின் நிலைமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாஸ கேட்டறிந்து கொண்டார்.
இதையடுத்து குடும்பத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக நிதியுதவியும் வழங்கப்பட்டது. திஸாநாயக்கவின் குடும்பத்தின் எதிர்கால நலனுக்காக தன்னால் இயன்ற பங்களிப்பை தொடர்ந்தும் வழங்குவதாகவும் எதிர்கட்சி தலைவர் இதன்போது உறுதியளித்தார்.

