கண்டி எசல பெரஹராவின் முதலாவது கும்பல் பெரஹரா இன்று சனிக்கிழமை இரவு வீதிகளில் ஊர்வலமாக செல்லவுள்ளது.
தலதா மாளிகை பெரஹராவிற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் இதுவரையில் தயார் செய்யப்பட்டுள்ளதாக தலதா மாளிகை பெரஹரா ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜயம்பதி வெத்தகல தெரிவித்துள்ளார்.
இம்முறை ஊர்வலம் இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும், தலதா மாளிகையில் இருந்து ஊர்வலம் ஸ்ரீ தலதா வீதி, டி.எஸ். சேனநாயக்க வீதி, கோயில் வீதி, தேவ வீதி, ஸ்ரீமத் பென்னட் சொய்சா வீதி, யட்டிநுவர வீதி வழியாகச் சென்று ராஜ வீதி வழியாக சென்று நிறைவுபெறும்.
இந்த ஊர்வலத்தின் 35 யானைகள் பங்குபற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஊர்வலத்தில் சுமார் 2500 பேர் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊர்வலத்தின் போது கண்டியில் விசேட பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்