கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் தொலை காணொளி மூலம் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன் போது நீதவான் குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.










