குருணாகல் பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் அமைந்துள்ள கணணி நிறுவனமொன்றில் நேற்று செவ்வாய் கிழமை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீ பரவலில் நிறுவனத்தின் சில உபகரணங்கள் சேதமடைந்துள்ளதோடு எவ்வித உயிர் சேதங்களும் காயங்களும் ஏற்படவில்லை என்பதுடன் குருணாகல் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் குருணாகல் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீ பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
மின்கசிவு காரணமாக இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிப்பதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.