கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் விமான நிலைய வருகை முனையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமக்கான வேதனத்தை அதிகரிக்கக் கோரி அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய ஊழியர்களின் ஊதியம் கடந்த ஆறு வருடங்களாக அதிகரிக்கப்படவில்லை என விமான நிலைய ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் தம்மிக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.