குற்றவியல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய பயணிகளை அடையாளம் காணும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் நுழைவு பகுதியில் புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது
அதன்படி பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் விமான நிலையத்தின் நுழைவு பகுதியில் தன்னியக்க முக அடையாள கண்காணிப்பு அமைப்பு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
இதன் மூலம் சந்தேக நபர்களை இலகுவாக இனம் காண முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.