முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பிரதேச சபையை அலுவலகத்தை அண்மித்த பகுதியில் மிக அதிக அளவிலான கட்டாக்காலி கால்நடைகள் இரவு வேளைகளில் வீதியில் உறங்குவதால் வீதியில் செல்லும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குவதாக குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.