வலப்பனை நில்தண்டாஹீன நகரில் இன்று புதன் கிழமை காலை பார ஊர்தி ஒன்று கட்டுப்பாட்டை மீறி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
ரூப்பஹா பகுதியில் இருந்து மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற பார ஊர்தியே இவ்வாறு வேக கட்டுப்பாட்டை இழந்து கடை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பார ஊர்தியின் சாரதி படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வலப்பனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.