பாதுகாப்பு கமரா அமைப்புகளில் பதிவாகியுள்ள தரவுகளின் பிரகாரம், போக்குவரத்து விதிகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகளை மீறி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் தேடப்பட்டு, வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அபராதம் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கு தேசிய பொலிஸ் துறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.