வெலியாய பகுதியில் வைத்தியர் கடிதம் ஒன்றினை எழுதி வைத்து விட்டு கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
42 வயதுடைய மொணராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் குறித்த கடிதத்தில் தன்னுடைய இந்த தற்கொலை தீர்மானத்துக்காக எவரையும் சந்தேகிக்க வேண்டாம் எனவும் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்கொலைக்கான வேறு காரணங்கள் கண்டறியப்படாத நிலையில், பிரேத பரிசோதனையின் போது தற்கொலை செய்துக்கொண்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.